வெள்ளி, 7 மே, 2010

என் நெஞ்சு

எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, ஆரம்பித்துவிட்டேன்

ஒரு பாதை தெரிகிறது, தொடர்ந்து செல்கிறேன் சட்டென்று இருட்டிகொண்டது திரும்பிவிட்டேன். இருட்டின் பயம் குரல்வளையை வருடியது

சாதாரண கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டுக்கிறேன், நின்றுவிட்டால் சூழ்ந்துவிடும் பிரச்சினைகள் மீண்டும் ஓட வைக்கிறன.

எதர்சையான நிகழ்வுகளை ஒன்றுசேர்த்து பார்க்கின்றேன், எதோ புரிகின்ற மாதிரி உள்ளது. ஆனால் ஒன்றும் புரியவில்லை.

நடந்து வந்த பள்ளம் மேடுகளை கணக்கிடுகின்றேன் எப்படியும் உயரத்திக்கு சென்றுவிடுவேன் என்று தோன்றுகிறது, ஆனால் இந்த பாளங்கிணற்றில் தான் அந்த உயரத்தை தேடிகொண்டுக்கிறேன்.

ஓடியதால் மேல் மூச்சு கீல்மூச்சு வாங்கினாலும் பரவா இல்லை, உல் மூச்சு நின்று போகாமல் இருந்தால் சரி.